Posts

கிறிஸ்துமஸ்: "ஒரு புதிய விடியல் | CHRISTMAS:A NEW DAWN | கிறிஸ்துமஸ் ஆராதனை | Jesus Sam

 *CSI, கிறிஸ்துமஸ் ஆராதனை* (25.12.2024). தலைப்பு: *கிறிஸ்துமஸ்: "ஒரு புதிய விடியல்"* (CHRISTMAS:A NEW DAWN). வேதப் பகுதிகள்: @ ஏசாயா 9:1-7. @ கலாத்தியர் 4:1-7. @ சங்கீதம்  (திருப்பாடல்கள்) 98:1-9. @ லூக்கா 2:1-14. இறைச் செய்தி: *ப‌.ஜார்ஜ்*, @ 8056720930, சபை ஊழியர் . *முன்னுரை:* *யதார்த்தமான உண்மை:* @ கருவாக முழு வளர்ச்சி அடைந்த கோழிக்குஞ்சு முட்டையின் ஓட்டை உடைத்துக் கொண்டு வெளியேற வேண்டும் என்பது இயற்கை நியதி. ஒருவேளை அதனால் உடைக்க முடியாத அளவுக்கு ஓடு கடினமாக இருந்தால் உள்ளேயே ஒடுங்கி வெந்து மடிந்து விடும்.  @ அதுபோல வளர வாய்ப்போ வசதியோ இல்லாத நிலையில் *குழந்தை இயேசு* நம் இதயத்தின் இறுக்கத்தில் சிக்கி இறக்க வேண்டியது தான். இறந்த அது உள்ளேயே இருந்தால் தாய்க்கும் ஆபத்து. @ நம் வசதிக்கேற்ப இயேசுவையே வழிபட முயல்கிறோம்! @ இயேசு பிறந்தார் என்பதை விட, இயேசு ஏன் பிறந்தார்..? @ இயேசு எதற்காகப் பிறந்தார்..? என்பது முக்கியமானது. @ இன்று இயேசு எப்படிப் பிறக்கிறார்..? என்பது அதைவிட முக்கியமானது.! @ இயேசு கண்டிப்பாக இன்றும் பிறந்தாக வேண்டும். ஆனால் அது குடிலில் காணும்  *பொம்மை ...

MARANATHA O..! LORD COME | மாரநாதா:ஆண்டவரே வாரும் | திருவருகைக் காலம் - நான்காம் ஞாயிறு ஆராதனை | Jesus Sam

 *CSI, திருவருகைக் காலம் -நான்காம் ஞாயிறு ஆராதனை* (22.12.2024). தலைப்பு: *மாரநாதா:ஆண்டவரே வாரும்* (MARANATHA: O..! LORD COME). வேதப் பகுதிகள்: @ உபாகமம்  (இணைச் சட்டம்) 18:15-22. @ 1 கொரிந்தியர் 16:13-24. @ சங்கீதம்  (திருப்பாடல்கள்) 28:1-9. @ யோவான் 1:1-14. இறைச் செய்தி: *ப.ஜார்ஜ்*, @ 8056720930, சபை ஊழியர். *முன்னுரை:* @ கடவுளே.! *மரங்களிலிருந்து இலைகள் உதிரும் இலையுதிர் காலம் போன்று நாங்கள் இருக்கிறோம் .!* எங்களுக்கு செழிப்பை தர வாரும் மாரநாதா.! @ *எனக்கு எல்லாம் மீட்பே இல்லை.!* என்ற அவநம்பிக்கையோடு குழியில் இருந்த *யோசேப்புக்கு* நம்பிக்கையின் ஒளியைக் காண்பித்த கடவுளே எங்களுக்கும் நங்கூரமாக இருக்க வாரும் ஆண்டவரே.! @ தானும் அடிமைத்தனத்தில் விழுந்து விடாதபடி ஒரு இனத்தின் அடையாளமாகிய  *ராஜாத்தி எஸ்தரை* மீட்டுக் கொண்டதைப் போல எங்களை இரட்சிக்க வாரும்.! @ *நான் நினைப்பது எதுவும் நடப்பதில்லை. நான் நல்லவனாக இருக்க நினைத்தாலும் இருக்க முடிவதில்லை.!* என்று புலம்பிய *சிம்சோன்* போல் புலம்புகிறோமே.? எங்களை மீட்க வாரும் மாரநாதா..! @ *நான் விழுந்த துன்பத்திலேயே மீண்டும் விழுக...

DELIVERANCE FROM THE BONDAGE OF SIN | பாவத்தின் கட்டுகளில் இருந்து விடுதலை | திருவருகைக் காலம் -மூன்றாம் ஞாயிறு | Jesus Sam

 *திருவருகைக் காலம் -மூன்றாம் ஞாயிறு* (15.12.2024). தலைப்பு: *பாவத்தின் கட்டுகளில் இருந்து விடுதலை* (DELIVERANCE FROM THE BONDAGE OF SIN). வேதப் பகுதிகள்: @ யாத்திராகமம் (விடுதலைப் பயணம்) 14:1-14. @ ரோமர்  (உரோமையர்) 8:1-11. @ சங்கீதம்  (திருப்பாடல்கள்) 37:1-12. @ யோவான் 8:31-38. இறைச் செய்தி: *ப.ஜார்ஜ்*, @ 8056720930, சபை ஊழியர். *முன்னுரை:* @ பிறரின் குற்றங்களைப் பெரிதுபடுத்தி தங்களின் குற்றங்களை மூடி மறைக்க முயற்சி செய்வது தான் உலகில் மிகப்பெரிய பாவம்.! @ ஜெப ஆலயத்தில் ஜெபித்த பரிசேயர் *இவர்களைப் போல அல்ல, பிறரது குறைகளையும், குற்றங்களையும் மட்டுமே பேசித் தங்களை நல்லவர்களாக நீதிமான்களாகக் காட்ட முனைந்தார்.!* --லூக்கா 18:9-14. *யதார்த்தமான உண்மை:* *உங்களில் பாவமில்லாதவர் முதல் கல்லை எறியட்டும்.!*  என்று இயேசு சொல்லி முடிந்தவுடன் வானத்தில் இருந்து ஒரு கல் விழுந்தது என்று வேடிக்கையாகச் சொல்வது உண்டு. ஏனெனில் கடவுள் ஒருவர்தான் நல்லவர்,பரிசுத்தர். பிறரைத் தீர்ப்பிடுவதற்கு கடவுள் ஒருவர்தான் தகுதியானவர் .! @ எப்போதுமே பிறர், சுமத்தற்கரிய பளுவான சுமைகளைக் கட்டி மக்களின் ...

WORD OF GOD: INSPIRED TO INSPIRE | ஊக்கப்படுத்த இறை தூண்டல் பெற்றது | Sunday Service Message | Jesus Sam

Image
======== CSI -திருவருகைக்காலம் இரண்டாம் ஞாயிறு (விவிலிய ஞாயிறு-08-12-2024) ========== தலைப்பு: இறைவார்த்தை: ஊக்கப்படுத்த இறை தூண்டல் பெற்றது (WORD OF GOD: INSPIRED TO INSPIRE) வேதப் பகுதிகள்: 1 இராஜாக்கள் (அரசர்கள்) 19:1-21. வெளிப்படுத்தல் (திருவெளிப்பாடு) 10:1-11. @ சங்கீதம் (திருப்பாடல்கள்) 119:33-40. @ லூக்கா 1:39-45. இறைச் செய்தி: ப.ஜார்ஜ் 8056720930, சபை ஊழியர். முன்னுரை: @ திருவருகைக்காலம் என்பது, கடவுளின் வருகைக்காக நம்மையே தயாரிக்கின்ற காலம். @ பிறக்கும் குழந்தை இயேசு கடவுளை எதிர்கொள்ள, கடவுளை நம்முள் வரவேற்க ஆயத்தமாக இருக்கக்கூடிய காலம். அத்தகைய காலத்தில் நாம் நம்மையே ஆண்டவரிடம் ஒப்புக்கொடுத்து, அவரை வரவேற்க ஆயத்தமாவோம். @ 1948-ஆம் ஆண்டு முதல் மனித உரிமைகளுக்காக உலகம் முழுவதும் டிசம்பர் 10-ஆம் தேதியன்று, உலகம் முழுவதும் *மனித உரிமை தினம்* கொண்டாடப்படுகிறது. --ஏசாயா 40:3-4. @ இந்த வசனத்தின் அடிப்படையில்தான் 1963-ஆம் ஆண்டு அமெரிக்காவிலுள்ள *லிங்கன் சதுக்கத்தில்* உலகப் புகழ் பெற்ற *மார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியர்* என்ற புரட்சிப் பிரசங்கியார் *I Have a Dream* அதாவது *எனக்கொரு கனவு...