DELIVERANCE FROM THE BONDAGE OF SIN | பாவத்தின் கட்டுகளில் இருந்து விடுதலை | திருவருகைக் காலம் -மூன்றாம் ஞாயிறு | Jesus Sam
*திருவருகைக் காலம் -மூன்றாம் ஞாயிறு*
(15.12.2024).
தலைப்பு:
*பாவத்தின் கட்டுகளில் இருந்து விடுதலை*
(DELIVERANCE FROM THE BONDAGE OF SIN).
வேதப் பகுதிகள்:
@ யாத்திராகமம்
(விடுதலைப் பயணம்) 14:1-14.
@ ரோமர்
(உரோமையர்) 8:1-11.
@ சங்கீதம்
(திருப்பாடல்கள்) 37:1-12.
@ யோவான் 8:31-38.
இறைச் செய்தி:
*ப.ஜார்ஜ்*,
@ 8056720930,
சபை ஊழியர்.
*முன்னுரை:*
@ பிறரின் குற்றங்களைப் பெரிதுபடுத்தி தங்களின் குற்றங்களை மூடி மறைக்க முயற்சி செய்வது தான் உலகில் மிகப்பெரிய பாவம்.!
@ ஜெப ஆலயத்தில் ஜெபித்த பரிசேயர் *இவர்களைப் போல அல்ல, பிறரது குறைகளையும், குற்றங்களையும் மட்டுமே பேசித் தங்களை நல்லவர்களாக நீதிமான்களாகக் காட்ட முனைந்தார்.!*
--லூக்கா 18:9-14.
*யதார்த்தமான உண்மை:*
*உங்களில் பாவமில்லாதவர் முதல் கல்லை எறியட்டும்.!*
என்று இயேசு சொல்லி முடிந்தவுடன் வானத்தில் இருந்து ஒரு கல் விழுந்தது என்று வேடிக்கையாகச் சொல்வது உண்டு. ஏனெனில் கடவுள் ஒருவர்தான் நல்லவர்,பரிசுத்தர். பிறரைத் தீர்ப்பிடுவதற்கு கடவுள் ஒருவர்தான் தகுதியானவர் .!
@ எப்போதுமே பிறர்,
சுமத்தற்கரிய பளுவான சுமைகளைக் கட்டி மக்களின் தோளில் வைக்கிறார்கள்.!
--மத்தேயு 23:4.
@ நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து பாவத்தை வெறுக்கின்றார். ஆனால் எந்தப் பாவியையும் அவர் வெறுப்பதில்லை.
@ பாவம் என்பதற்கு திருட்டு என்ற பொருளும் உண்டு.
@ கடவுள் உலகின் முதல் பாவிகளை சந்திக்க ஏதேன் தோட்டம் சென்றார்.
@ இயேசு,நல்ல சமாரியராக, ஒரு திருடனைத் தேடி எரிகோ நகருக்குச் சென்றார்!
@ கடைசியாக ஒரு திருடனைத் தேடி கல்வாரி மலைக்குச் சென்றார்.!
@ உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல, அதை மீட்க வந்தவர் இயேசு.
--யோவான் 3:17.
*உண்மை நிகழ்வு:*
@ ஆங்கில மொழியில் பயன்படுத்தப்படும் *Pandora's box*, அதாவது, *பண்டோராவின் பேழை* என்ற சொற்றொடர், கிரேக்கப் புராணத்தில்(Myth) சொல்லப்படும் ஒரு கதையிலிருந்து உருவானது.
*பண்டோரா-Pandora*
என்ற பெயர்கொண்ட பெண்ணிடம், அவரது கணவர் ஒரு பேழையைக் கொடுத்து, அதைப் பத்திரமாகக் கண்காணிக்கும்
படியும், *எக்காரணத்தைக் கொண்டும் அந்த பேழையை திறந்து விடக்கூடாது.!*
என்றும் கட்டளையிட்டார். அந்தப் பேழையில் என்னதான் இருக்கிறது.? என்று காணும் ஆவலில், பண்டோரா, அந்தக் பேழையைத் திறந்தார். அதற்குள்
அடைக்கப்பட்டிருந்த *சாவு, நோய்கள், தீமைகள் அனைத்தும் வெளியேறி, உலகெங்கும் பரவியது.!* என்று கிரேக்க புராணக் கதையொன்று கூறுகிறது.
@ இந்தக் கதையைப் பின்புலமாகக் கொண்டு, யாராவது ஒருவர், அறிந்தோ, அறியாமலோ, பிரச்சனைகளைத் துவக்கி வைத்தால், அவர், *பண்டோராவின் பேழை* யைத் திறந்துவிட்டார் என்று சொல்வது, ஆங்கில மொழியில் ஒரு சொல்லாடலாக உருவெடுத்துள்ளது.
@ *உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன. நான் உன்னைத் தீர்ப்பிடவில்லை, சமாதானமாகப் போ. இனி பாவம் செய்யாதே.!*
என்றார்.
-- *யோவான் 8:11*.
1) *எகிப்தின் அடிமைத் தனத்திலிருந்து விடுதலை:*
(Freedom from Slavery in Egypt).
@ கடந்த நாட்களில் கடவுள் அநேகரை கட்டுகளிலிருந்து விடுதலை செய்திருக்கிறார். *படுகுழியில் இருந்து யோசேப்புக்கு விடுதலை* தந்தார்.
@ *இஸ்ரவேல் மக்களை அடிமைத்தனத்திலிருந்தம், பத்து கொடிய வேதனையிலிருந்தும் விடுதலை* தந்தார்.
@ *மனாசேயின் வருத்தத்திலிருந்து கடவுள் விடுதலை* தந்தார்.
@ *தீர்க்கதரிசி எரேமியாவை* கீழ் நிலையிலிருந்து உயர்த்தி இருக்கிறார்.
@ *தூய பேதுரு* தன் மறுதலிக்கும் வாழ்விலிருந்து விடுதலை தந்தார்.
@ இவர்களோடு இன்னும் பலரையும் நினைத்துப் பாருங்கள்.!
--சங்கீதம் 146:7.
@ உண்மையாகவே கடவுள்,
ஒவ்வொரு விநாடியிலும் பூட்டப்பட்டிருந்த கதவுகள் திறக்கிறார்.கட்டப்பட்ட கால் விலங்குகளை அறுத்து விடுகிறார்.
@ இந்த காலத்தில் நீங்கள் துக்கம், சந்தேகம் மற்றும் பயத்தில் இருந்தால், அவர் உங்களை விடுவிப்பதில் மகிழ்ச்சி அடைவார். உங்களுக்கு விடுதலை கொடுப்பது இயேசுவுக்கு மகிழ்ச்சியாக இருக்கும்.
@ 430 ஆண்டுகளாக கடவுளின் பிள்ளைகள் எகிப்தில் அடிமைத்தனத்தில் இருந்தனர். கடவுள் மோசேயை அழைத்தார் விடுவிக்க.
--யாத்திராகமம் 12:37.
@ எகிப்தில் இருந்து
1.5 முதல் 2 மில்லியன் இஸ்ரவேல் மக்கள் அணிவகுத்துச் சென்றதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
*யதார்த்தமான உண்மை:*
--1 பேதுரு 4:12-13.
@ கிறிஸ்துவுக்குள் நம் வாழ்க்கையும் இந்த *பாப் கார்ன்-Pop Corn*
போன்றது.
இந்த அற்புதமான சிற்றுண்டியை பலர் விரும்பி சாப்பிடுகிறார்கள். என்ன ஒரு அற்புதமான நறுமணத்தை வெளிப்படுத்துகிறது.?
ஆனால் இந்த சிற்றுண்டி சோளத்தின் வாழ்க்கை மேலே கடினமான *கர்னல்-Carnal* ஆகத் தொடங்குகிறது என்பதை நீங்கள் அறிவீர்களா.? பிறகு அது வெப்பத்திற்கு உட்படுத்தப்பட்டு, அழுத்தத்தின் கீழ், அது ஒரு சிறந்த சிற்றுண்டியாக உருவாக்கப்பட்டு
*பாப் கார்ன்* என்று அழைக்கப்படுகிறது.
இந்த சிறந்த சிற்றுண்டியில் பாப்கார்ன் வெடிக்கும் முன் அது வெப்பத்தையும் அழுத்தத்தையும் கடந்து செல்ல வேண்டும். இதேபோல் தான் இஸ்ரவேல் மக்கள் மற்றும் கடவுளின் பிள்ளைகளாகிய நாமும் கடந்து செல்ல வேண்டும்.
@ இங்கே தூய பேதுரு சொல்லும் அக்கினிச் சூளையை,அக்கினி சோதனையை நாம் அனைவரும் கட்டாயம் எதிர்கொள்ள வேண்டும்.
-- யாத்திராகமம் 14:1-4.
@ கடவுள் தம்முடைய மகிமையை மனிதர்களுக்கு வெளிப்படுத்த நம்பமுடியாத அற்புதத்தை
செய்கிறார்.
@ கடவுள் தம்முடைய மக்களை மீட்பதன் மூலம் அவருடைய மகிமையை வெளிப்படுத்தினார்.
*வரலாற்று உண்மை:*
@ கடவுளோடு நாம் நடப்பதில் உள்ள பிரச்சனையின் ஒரு பகுதி, அவர் யார் என்பதை நாம் அடையாளம் காணத் தவறுவது.
@ ஆம் நம் அன்றாட வாழ்வில் இறைவனைக் காணத் தவறுகிறோம்.
@ பூமியை 62 முறை சுற்றி வந்த விண்வெளி வீரர் *ஜேம்ஸ் மெக்டிவிட்-James Mc Divitt* என்பவர் கூறியதாவது:
*கடவுள் எனது விண்வெளி பயணத்தில் ஜன்னல் வழியே பார்ப்பதை நான் பார்க்கவில்லை, பூமியில் உள்ள எனது காரின் கண்ணாடியில் கடவுளை நான் பார்ப்பதில்லை ஆனால், நட்சத்திர மண்டலங்களிலும், தோட்டத்தில் பூக்களுக்கு நடுவே நடக்கும்போதும் அவருடைய மகிமையை என்னால் அடையாளம் காண முடிந்தது.!*
--யாத்திராகமம் 14:8-9.
@ நாம் ஒரு தேவாலயமாக *பின்வாங்குகிறோமா.?*
அல்லது
*முன்னோக்கி செல்கிறோமா.?*
*யதார்த்தமான உண்மை:*
@ ஆப்பிரிக்காவின் ஒரு பகுதியில் *குட்பை-Good Bye*
சொல்லாத ஒரு பழங்குடி இருப்பதாக வரலாற்று ஆசிரியர்களால் எழுதப்படுகிறது.
@ அந்த பழங்குடியினர் தங்கள் கிராமத்தில் இருந்து யாராவது வெளியேறும் போது,
*நன்றாகப் போ-Go Well* மற்றும்
*நன்றாக இரு-Stay Well* என்று கூறுகிறார்கள்.
இத்தனை வருடங்களுக்குப் பிறகு கடவுளின் மக்கள் சிறிது காலம் *நன்றாக இருப்பதற்கு-Staying Well* எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
--அப்போஸ்தலர் 13:17.
@ எகிப்தில் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு, நிச்சயமாக அவர்கள் முன்னோக்கிச் செல்லவும், கடவுளால் வாக்குறுதியளிக்கப்பட்ட இடத்தைப் பெறவும் திட்டமிட்டனர்.
@ நாம் பின்னோக்கி செல்வது கடவுளின் விருப்பம் அல்ல, ஆனால் நாம் முன்னோக்கி செல்வது கடவுளின் விருப்பம்.!
--பிலிப்பியர் 3:13-14.
--யாத்திராகமம் 14:10.
@ *அவர்கள் பயந்தார்கள்* என்பதன் அர்த்தம். *கடுமையான பயம்* என்று அர்த்தம்.
@ அவர்கள் தங்கள் வாழ்க்கை முடிந்துவிட்டதாகவும், அவர்கள் இறக்கப் போகிறார்கள் என்றும் நம்பினார்கள்.
*வரலாற்று பின்னணி:*
@ *செங்கடல்-Red Sea*, சிவப்பு நிறம் அல்ல, ஆனால் அதைச் சுற்றியுள்ள மலைகள் மற்றும் ஒரு வகையான சிவப்பு நிற பாசிகளால் சிவப்பு நிறத்தைக் கொண்டுள்ளது, மனிதர்களால் கடக்க முடியாதது செங்கடல்.
@ இந்த செங்கடல் 1200 மைல்களுக்கு மேல் நீளமானது மேலும் ஒரு மைல் ஆழமானது.
@ சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு தொல்பொருள் ஆராய்ச்சியாளர் *ரான் வியாட்-Ron Wyatt* என்பவர் இந்த இடம் *அக்வாபா வளைகுடாவில்-Aquaba Gulf* என்ற இடத்தில்
*பழைய தேர் சக்கரங்களையும் மனித எச்சங்களையும்* கண்டறிந்தார்.
--யாத்திராகமம் 14:13.
@ அடிமைத் தனத்திலிருந்து விடுதலை பெற வேண்டுமானால்,
*அமைதியாக நின்று பாருங்கள்!*
@ அதாவது,
அசையாமல் நிற்க வேண்டும் என்பது, நீங்கள் இருக்கும் இடத்திலிருந்து எதையுமே கிளறாதீர்கள், ஓடிப்போக முன்வராதீர்கள்; அமைதியாக நில்லுங்கள் என்கிறார்.
--யாத்திராகமம் 14:14.
@ கர்த்தர் உங்களுக்காகப் போரிடுவார் .
அதுவே
*புனிதப் போர்-Holy War* என்றும் இன்றும்
*ஜிகாத் போர்* என்றும்
பண்டைய இஸ்ரவேலரின் கருத்தை இன்றைய மக்கள் பிரதிபலிக்கின்றனர்.
@ இதில் இஸ்ரவேலின் எதிரிகளை இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்தியுடன் தோற்கடிக்கும் தெய்வீக போர்வீரர் கர்த்தர்.
--யாத்திராகமம் 15:3.
@ இஸ்ரவேல் புத்திரர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டபோது, அவர்கள் கடவுளுடைய ஆசீர்வாதங்களுக்குள் கொண்டு செல்லப்பட்டனர்.
@ நாம் இயேசு கிறிஸ்துவுடன் ஒரு உறவில் நுழையும் போது, ஆன்மீக ரீதியில் நாம் எகிப்தை விட்டு வெளியேறி, வாக்களிக்கப்பட்ட தேசத்திற்கான பயணத்தைத் தொடங்க வேண்டும்.
-- *யாத்திராகமம் 23:27*.
2) *அறியாமையிலிருந்து விடுதலை:*
(Freedom from Ignorance).
@ இன்று பல நேரங்களில் நாம் பெற வேண்டிய புற விடுதலைகள் என்று பொருளாதாரம், அரசியல், சமூகம், சமயம் போன்ற தளங்களை ஆராய்கிறோம். ஆனால், இவையெல்லாம் தொடங்க வேண்டியது
*அக விடுதலையில் தான்-Inner freedom*.
@ இன்று என் மனத்தில் இருக்கும் அறியாமை இருள் அழிந்தால் தான் என்னால் அடுத்தவரைச் சரியாகப் பார்க்க முடியும்.
@ இதையே இயேசு, *கடவுளின் வார்த்தைகளே உங்களை விடுதலை செய்யும்* என்கிறார்.
*வேடிக்கை நிகழ்வு:*
@ காட்டு வழியே பயணம் செய்து கொண்டிருந்த ஒருவனை ஒரு புலி துரத்துகிறது. எப்படியாவது புலியிடமிருந்து தப்பி ஓடவிட வேண்டும் என நினைத்த அவன் வேகமாக ஓடுகிறான்.
ஓடும் வழியில் ஒரு பெரிய பள்ளத்தாக்கு. பின்னால் புலி. முன்னால் பள்ளத்தாக்கு. இருந்தாலும் பள்ளத்தாக்கில் குதிக்கிறான். குதித்து கீழே போய்க்கொண்டிருக்கும் வழியில் ஒரு மரத்தின் வேரைப் பற்றிக் கொள்கிறான்.
*அப்பாடா! என்று பெருமூச்சு விட்டவாறு.!* கீழே பார்க்கிறான். அங்கே புலி அவனுக்காகக் காத்திருக்கிறது. அண்ணாந்து மேலே பார்க்கிறான். இரண்டு எலிகள் அவன் பற்றியிருந்த வேரைத் தோண்டிக் கொண்டிருக்கின்றன. தன் அருகில் ஒரு *ஸ்ட்ராபெரி கொடி*. அழகான பழங்கள் தொங்கிக் கொண்டிருக்கின்றன. அதில் ஒன்றைப் பறித்து வாயில் போட்டு
*என்ன சுவையாய் இருக்கின்றது இந்தப்பழம்.!*
என்றான் அவன்.
*உடனே அவன் ஞானம் பெற்றான்.!* அந்த வாலிபன்.
@ *அறியாமை என்பது ஞானம் அடைவதற்கான தடையாக இருக்கிறது!*
அல்லது
*அறியாமை அகலும்போது ஞானம் பிறக்கிறது.!*.
@ ஆளுநர் *நெகேமியா* மற்றும் தலைமை குருவான *எஸ்றா*
இருவரும் இணைந்து யூதா நாட்டை குழப்பத்திலிருந்தும், சமய கண்டு கொள்ளாத்தன்மையிலிருந்தும், ஏழ்மையிலிருந்தும் காப்பாற்றுகின்றனர்.
-- நெகேமியா 8:9.
--ரோமர் 8:2.
@ நம்முடைய பாவங்களை அழிக்க கிறிஸ்துவின் பிறப்பு நமக்கு காணிக்கையாக அமைந்துள்ளது.
@ நாம் யாராக இருந்தாலும் பாவத்தின் காரணமாக கடவுளின் கோபத்திற்கு ஆளாகிறோம். ஆனால் கிறிஸ்துவின் பலி ஏற்றுக்கொள்ளப்பட்டதால், நமக்கு விடுதலை கிடைத்தது.
@ இங்கே தூய பவுல் ஆவிக்குரிய வாழ்க்கை வாழ நம்மை அழைக்கிறார்.
--ரோமர் 8:4-5.
@ ஒரு மனிதன் கோபத்தால் நிரப்பப்பட்டால், கோபம் அவனுடைய வாழ்க்கையைக் கட்டுப்படுத்துகிறது.
@ ஒரு மனிதன் பேராசையால் நிரப்பப்பட்டால், பேராசை அவனது வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்துகிறது.
@ ஒரு மனிதன் காமத்தால் நிரப்பப்பட்டால், காமம் அவனது வாழ்க்கையை நிர்வகிக்கிறது.
@ ஒரு மனிதன் அன்பால் நிரப்பப்பட்டால், அவன் செய்யும் எல்லாவற்றிலும் அன்பு செல்வாக்கு செலுத்துகிறது.
@ மேலும் ஒரு மனிதன் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டால், அவன் பரிசுத்த ஆவியானவரால் கட்டுப்படுத்தப்படுகிறான் .
--தீத்து 3:5.
@ ரோம் நகர மக்கள், பவுலின் பிரசங்கத்தை குறை சொல்கிறார்கள்.
மேலும் தூய பவுலுக்கு எதிராக வாதங்களையும் தவறான கருத்துக்களையும்
முன் வைக்கிறார்கள்.
--ரோமர் 8:9.
@ ஆவியானவர் எல்லா விசுவாசிகளிலும் *குடியிருக்கிறார்* அல்லது *வாசமாயிருக்கிறார்* என்று போதிக்கிறது.
@ இங்கே *குடியிருப்பு* என்ற வார்த்தை *வீடு* என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து வந்தது.தூய ஆவியானவர் நம்முடைய இருதயத்தில் குடியிருக்கிறார்.
--எபேசியர் 4:17.
@ *சிம்சோன்* கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு, *கடவுளே, தயவுசெய்து என்னை நினைவில் வைத்து, இந்த நேரத்தில் என்னைப் பலப்படுத்துங்கள்!*
என்று வேண்டிக் கொண்டார் கடவுள் அவருக்கு பலத்தை கொடுத்தார்.
--நியாயதிபதிகள் 16:28.
--ரோமர் 8:11.
@ *இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பிய ஆவியானவர் உங்களில் வாழ்கிறார்.!*
என்று தூய பவுல் சுட்டிக்காட்டுகிறார்.
@ இதையே வேறு விதமாகக் கூறினால், அதே ஆவியானவர் இயேசுவைப் போலவே உங்களிடமும் இருக்கிறார்.
--எசேக்கியேல் 18:23.
@ இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பிய அதே வல்லமையை ஆவியானவர் நமக்குள் செலுத்துகிறார்.
@ அடிமைத்தனம் என்ற வார்த்தை கிரேக்க வார்த்தையான *டூலியூ- டூலியோ'-ஓ-Douleuo- Doolyo’-O.!* என்பதிலிருந்து வந்தது, அதாவது *அடிமையாக இருத்தல்* என்று பொருள் படும்.
@ நாம் அனைவரும் நம் வாழ்வில் ஏதோ ஒரு வகையான அடிமைத்தனத்தில் இருந்திருக்கிறோம்
கடவுள் நமக்கு விடுதலை தர வந்தார்.
-- *ஏசாயா 26:3*.
3) *கடவுளின் வார்த்தை: பாவத்தின் கட்டுகளில் இருந்து விடுதலை தருகிறது:*
(God's word gives freedom from the Bonds of Sin).
*உண்மை நிகழ்வு:*
@ அமெரிக்காவைச் சேர்ந்த மிகப்பெரிய எழுத்தாளர் *எர்னெஸ்ட் ஹெமிங்வே-Earnest Hemingway (1899-1961)*. இவர் எழுதிய
*கிழவனும் கடலும்- (The Old Man and the Sea)* என்ற நாவலுக்காக 1954 ஆம் ஆண்டு நோபல் பரிசு கிடைத்தது. இவர் பெரிய பணக்காரர், விளையாட்டிலும் வேட்டையாடுவதிலும் வீரதீரச் செயல்களைச் செய்வதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தவர். மட்டுமல்லாமல், இவர் தான் படைத்த கதாப்பாத்திரங்களைக்கூட வீரதீரச் செயல்களை செயபவர்களாகப் படைத்தவர். இவர் விமானத்தில் பயணம் செய்யும்பொழுது, விமானம் மோதி மூன்றுமுறை உயிர் பிழைத்தவர்.
@ ஆனால் இவரோ கடவுள் நம்பிக்கையில்லாதவர் என்பதுதான் வியப்புக்குரிய செய்தி. 1961 ஆம் ஆண்டு இவருக்குப் புற்றுநோய் வந்தது. வீரதீரச் செயல்களில் ஈடுபடும் இவர், எப்படியும் புற்றுநோயிலிருந்து மிக எளிதாக மீண்டு விடுவார் என்றுதான் எல்லாரும் நினைத்தார்கள்; ஆனால், இவர் யாருமே நினைத்துப் பார்த்திராத வகையில், துப்பாக்கியை எடுத்துத் தன்னையே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
@ ஒருவர் எவ்வளவு பெரிய திறமைசாலியாக இருந்தாலும், அவர் கடவுள்மீது நம்பிக்கையில்லாமல் இருக்கும்பொழுது, அவரது முடிவு மிகக் கொடியதாகவே இருக்கும்.
@ இந்த யோவான் 8 ஆம் அதிகாரத்தின் தொடக்கத்தில், விபச்சாரத்தில் சிக்கிய ஒரு பெண்ணுடன் இயேசு காட்டப்படுகிறார் பின்னர் அவர் விடுதலை பெறுகிறார்.
@ விசுவாசிகளுக்கும் அவருடைய சத்தியத்திற்கு உண்மையுள்ளவர்களுக்கு மட்டுமே சுதந்திரம் வழங்கப்படுகிறது.
@ இயேசு சொன்ன இந்த விடுதலை என்ன..?
@ மேலும் நமக்கு எதிலிருந்து விடுதலை தேவை..?
@ யூதர்கள்,
எகிப்தில் அடிமைகளாக இருந்த வரலாற்றையும், 70 ஆண்டுகளாக பாபிலோனுக்கு நாடு கடத்தப்பட்டதையும், அந்த நேரத்தில் ரோமுக்கு அடிபணிந்ததையும் கருத்தில் கொண்டு அவர்களின் வாழ்க்கை குழப்பமாக இருந்தது.
@ யூதர்களைப் போலவே, நாமும் யாருக்கும் அடிமையாக இருந்ததில்லை என்று கூறலாம்.ஆனால் நாம் எதிலிருந்து விடுபட வேண்டும்..?
--யோவான் 8:32.
@ சில சமயங்களில், தந்தை தம்முடைய குமாரனை உலகிற்கு அனுப்பினார் என்பது நம்மை விட்டுவிடுவதற்கு அல்ல, ஆனால் நம்மைக் காப்பாற்றுவதற்காக என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
@ சரீர அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பற்றி இயேசு பேசவில்லை.
--யோவான் 8:34.
--2 கொரிந்தியர் 3:17.
@ *சத்தியம்(உண்மை )விடுதலையாக்கும்!* என்றால், இயேசு விடுதலையாக்குவார் என்று பொருள். அதனால்தான் *குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்* என்று படிக்கிறோம். --யோவான் 8:36.
@ *உண்மையை எடுத்துரைப்பதே என் பணி!*
என்று ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து கூறுகிறார்.
@ அடிமைத்தனத்திலிருந்து உண்மை நம்மை விடுவிக்கிறது.
--கலாத்தியர் 5:1.
@ எந்த ஒரு மனிதரும் கட்டப்பட்டிருக்க விரும்பவில்லை.விடுதலை பெறவே விரும்புகின்றனர்.
@ கடவுள் மனித குலத்திற்கு அளித்துள்ள மிகப் பெரிய பரிசு விடுதலை.
@ நாம் கடவுளால் ரோபோக்களாக உருவாக்கப்படவில்லை. கடவுள் தம்முடைய அசாத்திய அன்பினால் நாம் செல்லக்கூடிய பாதையைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தை நமக்கு அளித்திருக்கிறார்.
@ உண்மையான விடுதலை என்பது நீங்கள் யார்.? என்பதை அறிவதில் உள்ளது.இயேசு கிறிஸ்து மட்டுமே நம்மை விடுதலை செய்ய முடியும்.!
-- *யோவான் 18:37*.
*நிறைவாக:*
@ பாவிகள் எல்லோரும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் அல்ல. மன்னிக்கப்பட வேண்டியவர்கள் என்பது இயேசுவின் புதிய சட்டம்.
@ நம் முன்னோர்
*யாக்கோபு* தண்டிக்கப்படவில்லை;மன்னிக்கப்பட்டார்.!
@ *மன்னர் தாவீது*, கொலை, விபசாரம் ஆகிய இருபெரும் பாவச் செயல்களைச் செய்தார். அவரது கொடிய பாவச் செயல்களை உணர்த்த வந்தார் *தீர்க்கதரிசி நாத்தான்* .
அதற்கு மன்னர் தாவீது,
*நான் ஆண்டவருக்கு எதிராகப் பாவம் செய்துவிட்டேன்!* என்று கூறினார்.
--2 சாமுவேல் 12:13.
@ பாபிலோனில் அடிமைப்பட்டு கிடந்த இஸ்ரவேல் மக்களுக்கு
*தீர்க்கதரிசி ஏசாயா* ஆறுதலின்
செய்தி கொடுத்து விடுவித்தார்.
@ *தூய பவுல்* தன்னுடைய பழைய வாழ்வை விடுத்து புதிய வாழ்வுக்குப் பயணமாகிறார்.!
@ பாவிகளின் அழிவை அல்ல;பாவிகள் மனம்மாறி வாழ்வதையே கடவுள் விரும்புகிறார்.
--எசேக்கியேல் 18:23.
*யதார்த்தம்:*
@ ஒரு பள்ளியில் ஆசிரியர் ஒரு மாணவரைப் பார்த்து இவ்வாறு கேட்டார்,
*நல்லவர்கள் எல்லோரும் வெள்ளையாகவும் தீயவர்கள் எல்லோரும் கருப்பாகவும் கடவுளின் படைப்பில் இருப்பார்கள் என்று வைத்துக் கொண்டால் நாம் எப்படி இருப்போம்..?* என்று ஆசிரியர் கேட்டார்.
அதற்கு ஒரு மாணவன் இவ்வாறு சொன்னானாம்: *வரிக்குதிரை போல இருப்போம் வரி வரியா கோடு கோடா கருப்பும் வெள்ளையுமாகக் கலந்து இருப்போம் .!*
என்ன ஒரு அறிவுப்பூர்வமான பதில்..!
@ எந்த மனிதனும் முழுமையாக நல்லவனுமில்லை. முழுமையாகக் கெட்டவனுமில்லை.!
@ *நாம் அனைவரும் பாவிகள்; விரைவில் கடவுளிடம் திரும்புவோம்.!*
-- *1 யோவான் 1:8*.
--இறைச் செய்தி,
*ப.ஜார்ஜ்*,
@ 8056720930,
சபை ஊழியர்,
தூய மத்தேயு ஆலயம், மேட்டுக்காலனி,
CSI மங்கலம் குருசேகரம்,
ஆந்திரப் பிரதேசம்.
Comments
Post a Comment