WORD OF GOD: INSPIRED TO INSPIRE | ஊக்கப்படுத்த இறை தூண்டல் பெற்றது | Sunday Service Message | Jesus Sam
======== CSI -திருவருகைக்காலம் இரண்டாம் ஞாயிறு (விவிலிய ஞாயிறு-08-12-2024) ========== தலைப்பு: இறைவார்த்தை: ஊக்கப்படுத்த இறை தூண்டல் பெற்றது (WORD OF GOD: INSPIRED TO INSPIRE) வேதப் பகுதிகள்: 1 இராஜாக்கள் (அரசர்கள்) 19:1-21. வெளிப்படுத்தல் (திருவெளிப்பாடு) 10:1-11. @ சங்கீதம் (திருப்பாடல்கள்) 119:33-40. @ லூக்கா 1:39-45. இறைச் செய்தி: ப.ஜார்ஜ் 8056720930, சபை ஊழியர். முன்னுரை: @ திருவருகைக்காலம் என்பது, கடவுளின் வருகைக்காக நம்மையே தயாரிக்கின்ற காலம். @ பிறக்கும் குழந்தை இயேசு கடவுளை எதிர்கொள்ள, கடவுளை நம்முள் வரவேற்க ஆயத்தமாக இருக்கக்கூடிய காலம். அத்தகைய காலத்தில் நாம் நம்மையே ஆண்டவரிடம் ஒப்புக்கொடுத்து, அவரை வரவேற்க ஆயத்தமாவோம். @ 1948-ஆம் ஆண்டு முதல் மனித உரிமைகளுக்காக உலகம் முழுவதும் டிசம்பர் 10-ஆம் தேதியன்று, உலகம் முழுவதும் *மனித உரிமை தினம்* கொண்டாடப்படுகிறது. --ஏசாயா 40:3-4. @ இந்த வசனத்தின் அடிப்படையில்தான் 1963-ஆம் ஆண்டு அமெரிக்காவிலுள்ள *லிங்கன் சதுக்கத்தில்* உலகப் புகழ் பெற்ற *மார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியர்* என்ற புரட்சிப் பிரசங்கியார் *I Have a Dream* அதாவது *எனக்கொரு கனவு...