WORD OF GOD: INSPIRED TO INSPIRE | ஊக்கப்படுத்த இறை தூண்டல் பெற்றது | Sunday Service Message | Jesus Sam

========
CSI -திருவருகைக்காலம் இரண்டாம் ஞாயிறு
(விவிலிய ஞாயிறு-08-12-2024)
==========
தலைப்பு:
இறைவார்த்தை: ஊக்கப்படுத்த இறை தூண்டல் பெற்றது
(WORD OF GOD: INSPIRED TO INSPIRE)
வேதப் பகுதிகள்:

1 இராஜாக்கள்
(அரசர்கள்) 19:1-21.

வெளிப்படுத்தல்
(திருவெளிப்பாடு) 10:1-11.

@ சங்கீதம்
(திருப்பாடல்கள்) 119:33-40.

@ லூக்கா 1:39-45.


இறைச் செய்தி:
ப.ஜார்ஜ்
8056720930,
சபை ஊழியர்.

முன்னுரை:
@ திருவருகைக்காலம் என்பது, கடவுளின் வருகைக்காக நம்மையே தயாரிக்கின்ற காலம்.

@ பிறக்கும் குழந்தை இயேசு கடவுளை எதிர்கொள்ள, கடவுளை நம்முள் வரவேற்க ஆயத்தமாக இருக்கக்கூடிய காலம். அத்தகைய காலத்தில் நாம் நம்மையே ஆண்டவரிடம் ஒப்புக்கொடுத்து, அவரை வரவேற்க ஆயத்தமாவோம்.

@ 1948-ஆம் ஆண்டு முதல் மனித உரிமைகளுக்காக உலகம் முழுவதும் டிசம்பர் 10-ஆம் தேதியன்று, உலகம் முழுவதும் *மனித உரிமை தினம்* கொண்டாடப்படுகிறது.
--ஏசாயா 40:3-4.

@ இந்த வசனத்தின் அடிப்படையில்தான் 1963-ஆம் ஆண்டு அமெரிக்காவிலுள்ள *லிங்கன் சதுக்கத்தில்* உலகப் புகழ் பெற்ற *மார்ட்டின் லூத்தர் கிங் ஜூனியர்* என்ற புரட்சிப் பிரசங்கியார் *I Have a Dream* அதாவது *எனக்கொரு கனவு உண்டு* என்ற தலைப்பில் அவர் நிகழ்த்திய உரையில்,

*இன்று நான் ஒரு கனவு காண்கிறேன்... ஒருநாள் இந்தச் சமவெளி உயர்த்தப்படும்; மலைகளும் குன்றுகளும் சமப்படுத்தப்படும்; கடினமான இடங்கள் சமமாக்கப்படும்; குறுகலான பாதைகள் நேராக்கப்படும்; கடவுளின் செல்வாக்கு வெளிப்படுத்தப்படும்; எல்லா மனித உடல்களும் ஒன்றாகவும் சமமாகவும் பார்க்கப்படும். இது என் நம்பிக்கை!* என்று சமத்துவத்துக்கான குரலாக ஒலித்தார்.

@ கடவுளின் பிறப்பு நம் இருதயத்தில் சமத்துவ எண்ணங்களை பிறப்பிக்க உதவட்டும்.

@ இம்மண்ணில் மானிடராய்ப் பிறந்த ஒவ்வொருவரும், தனது சொந்த நாட்டில் வாழவும், கருத்துச் சுதந்திரம், எழுத்துரிமை, கல்வி, மருத்துவம், உடல்நலம், குடிநீர் போன்ற அடிப்படை தேவைகளைப் பெற்று சுதந்திரமாக உயிர் வாழவும் உரிமை உண்டு என்பதை இந்நாள் நமக்கு தெளிவுபடுத்துகிறது.

@ எனவே, நாமும் நமது வாழ்வில் வேறுபாடுகளைக் களைந்து அனைவரும் ஒன்றிணைந்து வாழும் இறையாட்சிக்கான இயேசுவின் கனவை நனவாக்க முற்படுவோம். இதுவே உண்மையான கிறிஸ்து பிறப்பு விழாவுக்கான நமது முன்னோட்டமாக அமையட்டும்.

@ சமத்துவத்தின் வழியாக அனைவருக்கும் மீட்பளிக்கும் மீட்பரைக் குறித்து முழக்கமிட்டு அறிவிக்க அவர்தம் மக்களாகிய நம்மை இந்த கிறிஸ்துமஸ் காலங்களில் கடவுள் அழைக்கின்றார்.

@ *நம் இதயங்கள் இயேசுவை நோக்கியவாறு நேராக்கப்பட வேண்டும். அப்படி செய்கின்ற பொழுது நம் இதயங்கள், வரவிருக்கும் குழந்தை இயேசு இறைவனை வரவேற்க ஆயத்தமாய் இருக்கும்.!*
-- *ஏசாயா 40:10*.

1) இறை வார்த்தை: வலிமை தந்தது:
(God's Word: Gives Strength).

யதார்த்தமான உண்மை:
@ அமெரிக்காவில் 1996 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்ற போது வாஷிங்டன் மாநிலத்தில் *ஒலிம்பிக் ஜோதி* தொடங்கியது.இது அட்லாண்டாவிற்கு வரும் வரை 15,000 மைல் மலைகளைத் தாண்டி 46 மாநிலங்கள் வழியாக *ரிலே-Relay Runner* ரன்னர்களால் அனுப்பப்பட்டது.

ஒலிம்பிக் ஜோதி ஏந்தியவரை தேர்வு செய்யும் முறை வரலாற்றில் மிகவும் முக்கியமானதாகும்.

@ *ஒலிம்பிக் சுடரை எடுத்துச் செல்வது என்பது ஒலிம்பிக் விளையாட்டுகளின் இலட்சியங்களையும் உணர்வையும் எடுத்துக்காட்டும் மிகவும் சிறப்பு வாய்ந்த நபர்களுக்கு வழங்கப்படும் ஒரு தனித்துவமான மரியாதையாகும்.!*

@ அதே போலத்தான்
*கடவுளின் நித்திய சுடரான இறைப்பணியை சுமப்பது என்பது கிறிஸ்துவின் ஆவியைச் சுமக்க விரும்பும் எந்தவொரு நபருக்கும் வழங்கப்படும் ஒரு தனித்துவமான மரியாதை!* ஆகும்.

@ அது தீர்க்கதரிசி எலியா மற்றும் தீர்க்கதரிசி எலிசாவுக்கு மட்டும் பொருத்தமான ஒன்றாகும்.

@ இறை வார்த்தை என்பது முதலாவது, பைபிளில் உள்ள கடவுளின் வார்த்தைகளை விளக்கி அதை வாழ்க்கையோடு தொடர்புபடுத்துவது.

@ இரண்டாவது,
கடவுளின் வாழ்க்கையை எடுத்து வேதத்தின் வெளிச்சத்தில் விளக்குவது.!

எலியா -ஓர் கண்ணோட்டம்:
@ கடவுளின் ஒரு வலிமைமிக்க *தீர்க்கதரிசி எலியா* தனது ஊழியத்திற்கு முடிவுரை எழுத நெருங்கினார்.

@ தீர்க்கதரிசி எலியா பொல்லாத அரசன் ஆகாபை எதிர்த்து சவால் விட்டார்.

@ ஆறு மாதம் மழையை நிறுத்தும் அளவுக்கு நம்பிக்கையுடன் பிரார்த்தனை செய்தார்.!

@ ஏனோக்கிற்குப் பிறகு விண்வெளியில் ஏறின இரண்டாவது மனிதர் எலியா ஆவார்.

@ தீர்க்கதரிசி எலியா,
மோசேயையும் இயேசுவையும் உருமாற்றத்தில் சந்தித்தார்.

@ எலிசாவைத் தன் வாரிசாகத் தேர்ந்தெடுக்க எலியா நியமிக்கப்பட்டார்.
--1 இராஜாக்கள் 19:3.

@ கடவுள் நம்மை நேசிப்பதால், அவர் எல்லா நேரங்களிலும் நம்முடன் இருக்கிறார், நம்முடைய ஒவ்வொரு மறைவிடத்தையும் அவர் அறிந்திருக்கிறார்.

*ஓடவும் முடியாது;ஒளியவும் முடியாது.!*.
--சங்கீதம் 139:7-8.
--1 இராஜாக்கள் 19:5.

@ நமது உடலுக்கு ஓய்வு தேவைப்படும் வகையில் கடவுள் நம் உடலை வடிவமைத்து உள்ளார்.எலியாவைப் போல நீங்கள் முழுவதுமாக களைத்துப்போகும் வரை கடவுள் வேடிக்கை பார்ப்பது இல்லை.
--1 இராஜாக்கள் 19:8.

@ இந்த ஓரேப் மலை பல நூறு மைல்களுக்கு அப்பால் இருந்ததால், எலியா அங்கு செல்ல 40 நாட்கள் கட்டாயம் பயணம் செய்து இருக்க வேண்டும்.

@ எலியா தீர்க்கதரிசி இஸ்ரேலின் வரலாற்றில் பூஜ்ஜிய நேரத்தில் தோன்றினார்.

பொய்க் கடவுளான பாகாலின் 450 தீர்க்கதரிசிகளை எலியா தோற்கடித்தார். கடவுள் வெற்றி பெற்றார்,

*அவர் ஒரு விண்கல்-(Asteroid) போல, கருமையான இருளில் இஸ்ரவேலுக்கு அருமையாக ஒளிர்ந்தார்.!*.
--1 இராஜாக்கள் 19:9.

@ எலியா 450 ஆண் தீர்க்கதரிசிகளைக் கண்டு பயப்படாமல் இருப்பது வேடிக்கையாக இருக்கிறது, ஆனால் ஒரு மோசமான பெண் அவனை உயிருக்கு ஓட வைக்கிறாள். அவள் தான் *யேசபேல்*.

@ இவள் சாதாரண பெண் அல்ல.அவள் சாத்தானின் மனைவி என்று நினைக்கிறேன்.

@ எலியா குகையில் தங்கினார்.!

@ நீங்களும் நானும் எந்த குகையில் இருக்கிறோம்..?

@ *குற்றத்தின் குகையா.?:*
நீங்கள் கடவுள் அல்லது வேறு யாரிடமாவது கோபமாக இருக்கிறீர்களா..?

@ *விரக்தியின் குகையா.?:*
நீங்கள் தனிமைப்படுத்தப்பட்டதாக உணர்கிறீர்களா..?

@ *ஆறுதல் குகையா.?:*
உங்கள் சொந்த கவலைகளால் தனிமைப் படுத்தப்பட்டிருக்கிறீர்களா.?

@ கடவுளின் மெல்லிய குரலைக் கேட்ட எலியா தன் *சுய குகையிலிருந்து-Self Pity* வெளியேறினார்.
--1 இராஜாக்கள் 19:13
--1 இராஜாக்கள் 19:16

@ எலியா வருவதற்கு முன்பே கர்த்தர் எலிசாவை அறிந்திருந்தார்.
--எபேசியர் 1:4.
--1 இராஜாக்கள் 19:19.

@ எலியா,
சாப்பாத்தின் மகன் எலிசாவைக் கண்டார். அவர் பன்னிரண்டு நுகத்தடிகள் கொண்டு எருதுகளை உழுது கொண்டிருந்தார்.

@ *எலிசா* தனது சொந்த வீட்டு வேலையாட்களை வழிநடத்தும் போது கூட, வெறும் கட்டளையால் அல்ல, முன்மாதிரியாக வழிநடத்தினார்.
--1 இராஜாக்கள் 19:21.

@ *எலிசா மாடுகளின் நுகத்தடிகளை அறுத்து போட்டார்; இறைப்பணிக்காகஎலிசாவின் மேல் நுகத்தடி கட்டினார் கடவுள்.!*

@ எலிசா தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் பிரியாவிடை பெற்று விருந்து உணவை உண்டு மகிழ்ந்தார். எலிசாவின் சொந்த உழவுத் தொழில் மூலம் இறைச்சி சமைக்கப்பட்டது.

@ இதனால் அவர் இறை வார்த்தை சொல்ல தன்னை தானே தயாரித்துக் கொண்டார்.மேலும் எலியாவின் இரண்டு வார்த்தைகள் எலிசாவை இறைப்பணி செய்ய வலுவூட்டியது.!
--1 இராஜாக்கள் 18:21.

@ இறை வார்த்தை சொல்பவர்கள் அனைவரும் கடவுளின் பணியாளர்களே.!அதனால் தான் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து

*நான் கடவுள் அல்ல; உங்களின் பணியாளர்-I am not God; but I am your Servant.!* என்று பாதங்கள் கழுவி நமக்கு முன் மாதிரியாக திகழ்ந்தார்.
-- *மத்தேயு 20:26-27*.


2) இறை வார்த்தை:புதுப்பிக்கிறது:
(Word of God: Updates).
@ திருவருகைக்காலம் என்பது, கடவுளின் வருகைக்காக நம்மையே தயாரிக்கின்ற காலம்.

@ கடவுளை எதிர்கொள்ள, கடவுளை நம்முள் வரவேற்க ஆயத்தமாக இருக்கக்கூடிய காலம். அத்தகைய காலத்தில் நாம் நம்மையே ஆண்டவரிடம் ஒப்புக்கொடுத்து, அவரை வரவேற்க ஆயத்தமாவோம்.

யதார்த்தமான உண்மை:
@ *ஜே.ஹெச். ஸ்மித்-J.H.SMITH* என்ற உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர் இவ்வாறு குறிப்பிட்டார்: *கிறிஸ்தவர்கள் அனைவரும் தங்களிடம் உள்ள திருவிவிலியத்தை ஒரே நேரத்தில் தட்டினால், அதிலிருந்து எழும் தூசு, உலகில் மிகப்பெரிய சூறாவளியை உருவாக்கினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.!* என்று எழுதுகிறார்.இது

எவ்வளவு வேதனை கலந்த உண்மையாக இருக்கின்றது.

@ *நாம் இறை வார்த்தையை வாசிப்பது இல்லை. வாசித்தாலும் அதன்படி வாழ்வதில்லை!* என்பதையே மேலே உள்ள வார்த்தைகள் நமக்கு எடுத்துக் கூறுகின்றன.

@ *இவ்வுலகில் இதுவரை அச்சடிக்கப்பட்ட நூல்களில் மிகவும் போற்றுதற்குரியதும் பயனுள்ளதுமான ஒரு நூல் உண்டெனில், அது திருவிவிலியம்.!* தான் என்பார் *பேட்ரிக் ஹென்றி-Patrick Henry* (1736-1799) என்ற அறிஞர். ஆகையால், மிகவும் போற்றுதற்குரியதும் பயனுள்ளதும் வாழ்வளிப்பதுமான திருவிவிலியத்தில் உள்ள இறைவார்த்தைகளை வாசித்து, வாழ்வாக்குவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.!
--வெளிப்படுத்தல் 10:1.

@ இங்கே *அப்போஸ்தலராகிய யோவான்* அவர்கள் *பலமுள்ள ஒரு தூதரைக்* காண்கிறார்.

@ இந்த தூதர் இயேசு என்று எங்கும் குறிப்படப் படவில்லை.

@ ஏனெனில் அப்போஸ்தலர் யோவானின் தரிசனங்களில் உயிர்த்தெழுந்த கிறிஸ்துவை *மனுஷ குமாரன்* என்று அழைக்கிறார்.
--வெளி 1:13.

@ மேலும், *யூதா கோத்திரத்துச் சிங்கமும் தாவீதின் வேருமானவர்* என்றும் கூறுகிறார்.
--வெளி 5:5.

@ அந்த சத்தம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து என்று கூறவோ அல்லது உணர்த்தவோ இல்லை. அந்தச் சத்தம்;

*தூதனுடைய கையில் இருக்கும் திறக்கப்பட்டசிறு புத்தகத்தை நீ போய் வாங்கிக் கொள்.!* என்று தான் சொல்கிறது.

@ அப்.யோவான் *அந்த சிறு புத்தகத்தை எனக்கு தாரும்.!* என்று கேட்டார்.
--வெளிப்படுத்தல் 10:2.

@ இச் சிறு புத்தகம்
*திறக்கப்பட்டதாயிருந்தது*.
மேலும் இது வித்தியாசமான புத்தகமாக இருந்தது.
--வெளி 5:1.

@ இந்த புத்தகம் பரிசுத்த வேதாகமத்திற்கு நிகரான புத்தகமாக இருந்தது.
ஏனென்றால்,
*பரிசுத்த வேதாகமும் ஒரு திறக்கப்பட்ட புத்தகமே.!*.
--வெளிப்படுத்தல் 10:3.

@ இங்கே
*இடிகள் -Thunder* கீழ்ப்படியாத இனத்து மக்கள் மேல் செலுத்தப்படும் கடவுளின் நியாயத்தீர்ப்பு ஆகும்.
--யாத்திராகமம் 9:23.

@ *பார்வோன்*, கடவுளுக்கு விரோதமாகத் தன் இருதயத்தை கடினப் படுத்திய போது கடவுள் இடி முழக்கங்களை அனுப்பினார் என்று படிக்கிறோம்.

@ இதே போல் *தீர்க்கதரிசி சாமுவேல்* காலத்தில் பெலிஸ்தியர் இஸ்ரவேல் மக்களுக்கு எதிராக கூட்டங்கூடினர்.கடவுள் தமது மக்களை இரட்சிக்க, பெலிஸ்தியர் மேல் இடி முழக்கங்களை அனுப்பி பாதுகாத்தார்.
--1 சாமுவேல் 7:7-10.
--வெளிப்படுத்தல் 10:4.

@ இங்கே,
*நீ எழுதாமல் முத்திரைப் போடு.!* என்ற வாக்கியம் நமக்கு விளக்கப்பட வில்லை.இதே போல் இன்னும் வெளிப்படுத்தாத காரியம் நிறைய உண்டு.
அது கடவுளின் வருகையில் நிறைவேறும்.

@ இங்கே
*மறைவானவைகள் எல்லாம் கடவுளுக்கு உரியது.!*
என்று மோசே நம்மை உணர்த்துகிறார்.
--உபாகமம் 29:29.
--வெளிப்படுத்தல் 10:5.

@ இங்கே சொல்லப்படும்
*இனி காலம் செல்லாது.!* என்பது *மாறுபாடான மக்கள்-Mal practice people* மீது கடவுளின் நியாயத்தீர்ப்பு வெகு சீக்கிரத்தில் வரும் என்றும் ஆயிரம் வருட அரசாட்சியை நிறுவ கடவுள் வருகிறார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
--வெளி 10:6.

@ இந்த நாட்களில் *கடவுளின் இரகசியம் நிறைவேறும்!*.
அப்போது பூமி கடவுளை அறிகிற அறிவினால் நிறைந்து இருக்கும்.
--ஏசாயா 11:9.

@ ஒவ்வொரு தனி மனிதனுக்கும் கடவுள் தம்மை தனித்தன்மையோடு வெளிப்படுத்துவார்.

இங்கே *தீர்க்கதரிசி எரேமியாவுக்கு* நியாயப்பிரமாணத்தை அதாவது இறை வார்த்தைகளை தம் மக்களின் இதயத்தில் எழுதி வைப்பார் என்று உரைக்கிறார்.
--எரேமியா 31:33-34.
--வெளிப்படுத்தல் 10:9-10.

@. இதே போன்று, *தீர்க்கதரிசி எசேக்கியேல்* அவர்களிடமும் ஒரு புத்தகத்தை கடவுள் கொடுத்து புசிக்க சொன்னார்.அது தேன் போல இருந்தது.
--எசேக்கியேல் 3:1-3.

@ ஆனால் நமக்கோ கடவுளின் வசனங்கள் வேதனையாக இருக்கிறது.

@ உண்மையாகவே கடவுளின் வார்த்தையை நாம் உட்கொள்ளும் போது நாம் கடவுளால் கட்டி எழுப்பப்படுகிறோம்.

@ விசுவாசத்தில் நல்ல போராட்டத்தைப் போராடி கடவுளுக்காக இறைப் பணி செய்து முற்றும் முடிய நமது விசுவாச ஓட்டத்தை ஓடும் படி கிறிஸ்துவில் பெலப்படுவோம்.!

@ இதோ கிருபையின் காலத்தில் இருக்கும் நமக்கு கடவுள் தமது இரகசியத்தை அல்ல;அவரையே நமக்கு வெளிப்படுத்த குழந்தையாக பிறப்பார்.

@ நாம் தான் நம்முடைய திருச்சபையின் மக்களுக்கு கடவுளின் வருகையை வெளிப்படுத் வேண்டும்.
-- *கொலோசெயர் 2:2*.

3) இறைவார்த்தை: வாழ்வு தந்தது:
(God's Word: Gives Life:)
வரலாற்று பின்னணி:
@ வாழ்வியலுக்கான சந்திப்பு *ஆதாம்- ஏவாள்* இடையே தோல்வியில் முடிந்தது.

@ பழைய ஏற்பாட்டில் மீட்பின் தொடக்கமாக அமைவது *கடவுள்-நோவா சந்திப்பு*.

@ அதனைத் தொடர்ந்து நமது மூத்த தந்தையர்களான *ஆபிரகாம், ஈசாக்கு, மற்றும் யாக்கோபு* இவர்களுடனான கடவுளின் சந்திப்பு. குறிப்பாக, இஸ்ரயேல் மக்கள் வேறு நாடுகளுக்கு நாடுகடத்தப்பட்ட நிலையில் அவர்களுக்குத் தனது மீட்புச் செய்தியை கொடுப்பதற்காக பெரிய தீர்க்கதரிசிகளான *எசாயா, எரேமியா, எசேக்கியேல்* மற்றும் சிறிய தீர்க்கதரிசிகளான

*ஆமோஸ், செப்பனியா, யோவேல், யோனா, மீகா ஆகியோருடன் இறைவன் மேற்கொண்ட சந்திப்பு* ஆகியவை குறிப்பிடத்தக்க சந்திப்புகள் ஆகும்.

@ புதிய ஏற்பாட்டைப் பொறுத்தளவில் இறைவன் தனது மீட்புத் திட்டத்திற்கான முதல் சந்திப்பை அன்னை மரியாளுடன் நிகழ்த்துகிறார். அதனைத் தொடர்ந்து மரியாளின் கணவர் *யோசேப்பு, சகரியா* என அவரின் சந்திப்புத் தொடர்கிறது.

@ பொதுவாக, சந்திப்புகள்:
இரண்டு வகையில் அமைகின்றன: ஒன்று,
*இயல்பாக அமையும் சந்திப்பு!*,

இரண்டாவது:
*நமது முயற்சியால் நாம் ஏற்படுத்தும் சந்திப்பு!*.
--லூக்கா 1:39-40.

@ இங்கே *மரியாள் -எலிசபெத்* சந்திப்பு பல வரலாற்று உண்மைகள் நிறைந்தது.

@ *ஒரு சிக்ஸ்டீனும்(Sixteen-மரியாள்), ஒரு சிக்ஸ்டியும்(Sixty-எலிசபெத்) சந்திக்கும் நிகழ்வு என்றும் சொல்லலாம்.!*

@ மரியாவின் வீட்டிற்கும் எலிசபெத்தின் வீட்டிற்குமான தூரம் 130 கி.மீ அதாவது 81 மைல். இந்தத் தூரத்தை அடைவதற்கு மரியா கழுதையின்மேல் பயணம் செய்திருக்கவேண்டும்.

@ இதைக் கடந்து செல்வதற்குக் குறைந்தது மூன்று நாட்களாவது ஆகியிருக்கவேண்டும். அதுவும் தன்னந்தனியாளாக இறைவனின் துணையை மட்டுமே நம்பி மரியாள் போயிருக்கிறார் என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.

@ மரியாளின் இந்த சந்திப்பின் பயணம் ஒரு சமூகத்திற்கான அழைப்பையும் வெளிப்படுத்துகிறது.

@ இவ்விருவரும் தங்கள் வாழ்வில் இறைவனைத் தேடியவர்கள். தன்னைத் தேடியவர்களைத் தேற்ற, இறைவன் அன்று வந்தார்; இன்றும் வருகிறார்.!

*அறிவியல் உண்மை:*
--லூக்கா 1:41.

@ *குழந்தை துள்ளிற்று.!* அல்லது *குழந்தை துள்ளியது.!*
என்று ஆசிரியர் லூக்கா பதிவு செய்யும்போது தான் நேரில் பார்த்தது போலவே எழுதியுள்ளார். அதற்கு ஒரு உதாரணம்தான் இது.

@ ஏனென்றால் *லூக்கா ஒரு மருத்துவர்* எனவே, கர்ப்பம் தரித்த பெண்களில் நிகழும் உடல் மாற்றங்கள் (CT scan ) போல் அவருக்குத் தெரியும்.

@ ஆக, இயல்பாக நடந்திருக்கும் ஒன்றை தானே வயிற்றுக்குள் சென்று பார்த்தது போல இங்கே பதிவு செய்கின்றார் மருத்துவர் லூக்கா.
--லூக்கா 1:44.

@ முதலில் லூக்கா இதைச் சொல்ல, பின் எலிசபெத்தும் தன் வயிற்றில் குழந்தை துள்ளியதாகக் குறிப்பிடுகின்றார். *என் ஆண்டவரின் தாய்!* - மரியாளின்

வாழ்த்துதலைக் கேட்டு வயிற்றுக்குள் இருக்கும் குழந்தை இப்போது துள்ளியது என்று எலிசபெத்துக்கு தெரிவதுபோல எழுதுகிறார் லூக்கா.

@ கருவில் சிசுவாக இருந்த *யோவான் ஸ்நானகனுக்கு* ஒன்றும் புரிந்திருக்காது, மேலும், கருவறையின் வெளியே நடக்கும் விசயம் கண்டிப்பாக புரிந்து கொள்ள முடியாது தான், இருந்தாலும் சந்தோஷத்தில் துள்ளி குதித்தார்.

@ இதிலிருந்து நமக்கு கிடைக்கும் நற்செய்தி என்னவென்றால், *கடவுள் நமக்காக பிரச்சினைகளை கையாண்டு அதற்கு நல்ல முடிவை கொடுக்கும் முன்பே நாம் சந்தோசம் அடையலாம்!* என்பதே.
--லூக்கா 1:42.

@ இவ்விருவருக்கும் இடையே நிகழ்ந்த அச்சந்திப்பு ஒருவரை ஒருவர் வாழ்த்துவதிலும், ஆசீர்வதிப்பதிலும், இறைவனைப் புகழ்வதிலுமே நிறைந்தது.

@ நமது கிராமங்களில் வயது முதிர்ந்தவர்கள், *மவராசனா இரு.!* *மவராசியா இரு.!* என்று வாழ்த்தும்போது, அந்த ஆசீர்வாதம், கேட்பவரை நிறைக்கிறது, ஆசீர்வாதம் கொடுப்பவரையும் நிறைக்கிறது.

@ மரியாவும், எலிசபெத்தும் நமக்குச் சொல்லித்தரும் பாடம் இதுவே.!
--லூக்கா 1:42 மற்றும் 45.

@ முதலில் *ஆசி பெற்றவர்* என அழைத்தவர், இப்போது *பேறு பெற்றவர் (பாக்கியவதி)* என அழைக்கின்றார்.

@ இங்கே மரியாளின் நம்பிக்கைக்கு மணிமகுடம் சூட்டுகின்றார் எலிசபெத்து.

@ இங்கே, மரியாளும் எலிசபெத்தும் ஒருவரை ஒருவர் சந்தித்து, ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களைப் பகிர்ந்து, ஒருவரோடு ஒருவர் மகிழ்வைப் பகிர்ந்து *நற்செய்தியின் தூதுவர்களாக-Gospel Ambassador* மாறுகின்றனர்.

@ மரியாள், எலிசபெத் என்ற இரண்டு உள்ளங்களின் மகிழ்வு நான்கு கண்களின் சந்திப்பு. இது இனிய உறவின் இதய சந்திப்பாக அமைந்தது. இறைமகன் இயேசுவும் இவ்வுலகத்தின் மீட்புக்காக மனிதனாகப் பிறந்தார்.

@ *உமது திருவுளத்தை நிறைவேற்ற இதோ வருகிறேன்.!* என்று தன்னையே பலியாக ஒப்புக்கொடுத்தார். இயேசுவின் வரவால் உலகம் மகிழ்ந்தது.
--எபிரெயர் 10:7.

@ *நிலக்கரி-Charcoal, வைரம்-Diamond* ஆகிய இரண்டுமே கரி வகையைச் சேர்ந்தவை; பூமிக்கடியில் இருக்கிறது.

@ பூமியின் அழுத்தம் பொறுக்க முடியாமல் வெளியில் வந்த கரி. நிலக்கரி, பல நூறு ஆண்டுகள் அழுத்தத்தைப் பொறுத்துக்கொண்ட கரிதான் வைராமாகிறது. துன்பத்தின் முடிவு இன்பம்!

@ வாழ்க்கையில் சோதனைகள் வருவது சிரமப்படுத்த அல்ல. மாறாகப் பட்டை தீட்ட !
இங்கே *மரியாள் மற்றும் எலிசபெத்* கடவுளால் பட்டைத் தீட்டப்பட்ட வைரங்கள்.!
-- *ரோமர் 6:13*.

*நிறைவாக:*
@ தனக்கு ஒரு உயரிய செய்தி சொல்லப்பட்ட போதும், தான் கருவைத் தாங்கி இருக்கும் வேளையிலும், தன்னுடைய உதவிக் கரத்தை நீட்டிட முன்வந்த மரியாள் நல்ல இறைவார்த்தையின் முன் மாதிரி.!

@ *உயரிய மனப்பான்மை கொள்ளாமல், தாழ் நிலையில் உள்ளவர்களோடு நன்கு பழகுங்கள்* என்ற *தூய பவுலின்* அறைகூவல் நம் காதுகளிலும் ஒலிக்க வேண்டும். அதுவே நல்ல இறைவார்த்தை.!

@ உதவிக் கரம் நீட்டுவோரின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகின்றது. இது ஆரோக்கியம் இல்லை என்பதனை உணர்ந்து, நாமும் உதவிக்கரம் நீட்டுவோம்.!

@ இறை வார்த்தையை தெளிவாக புரிந்துக் கொண்ட நம் முன்னோர்கள்

*நோவா, ஆபிரகாம், யோசேப்பு, யாக்கோபு,ரூத், எஸ்தர், மரியாள்* போல் வாழ்வோம்.!

@ கடவுளின் வார்த்தையை அசட்டை செய்த

*லோத்தின் மனைவி, யோபுவின் மனைவியைப் போல் வாழாமல் எச்சரிக்கையுடன் இருப்போம்.!*

@ இறைவனின் வார்த்தைகளை நமக்கு கேடகமாக வைப்போம்.!

@ இறை வார்த்தை: வாழ்வாகட்டும்.!

@ இறை வார்த்தை:வழியாகட்டும்.!

@ இறை வார்த்தை:வாழ்வை புதுப்பிக்கட்டும்.!
-- *எரேமியா 15:16*.

--இறைச் செய்தி,
*ப.ஜார்ஜ்*,
@ 8056720930,
சபை ஊழியர்,
தூய மத்தேயு ஆலயம், மேட்டுக்காலனி,
CSI மங்கலம் குருசேகரம்,
ஆந்திரப் பிரதேசம்.

Comments