MARANATHA O..! LORD COME | மாரநாதா:ஆண்டவரே வாரும் | திருவருகைக் காலம் - நான்காம் ஞாயிறு ஆராதனை | Jesus Sam
*CSI, திருவருகைக் காலம் -நான்காம் ஞாயிறு ஆராதனை*
(22.12.2024).
தலைப்பு:
*மாரநாதா:ஆண்டவரே வாரும்*
(MARANATHA: O..! LORD COME).
வேதப் பகுதிகள்:
@ உபாகமம்
(இணைச் சட்டம்) 18:15-22.
@ 1 கொரிந்தியர் 16:13-24.
@ சங்கீதம்
(திருப்பாடல்கள்) 28:1-9.
@ யோவான் 1:1-14.
இறைச் செய்தி:
*ப.ஜார்ஜ்*,
@ 8056720930,
சபை ஊழியர்.
*முன்னுரை:*
@ கடவுளே.!
*மரங்களிலிருந்து இலைகள் உதிரும் இலையுதிர் காலம் போன்று நாங்கள் இருக்கிறோம் .!*
எங்களுக்கு செழிப்பை தர வாரும் மாரநாதா.!
@ *எனக்கு எல்லாம் மீட்பே இல்லை.!*
என்ற அவநம்பிக்கையோடு குழியில் இருந்த
*யோசேப்புக்கு* நம்பிக்கையின் ஒளியைக் காண்பித்த கடவுளே
எங்களுக்கும் நங்கூரமாக இருக்க வாரும் ஆண்டவரே.!
@ தானும் அடிமைத்தனத்தில் விழுந்து விடாதபடி
ஒரு இனத்தின் அடையாளமாகிய
*ராஜாத்தி எஸ்தரை* மீட்டுக் கொண்டதைப் போல எங்களை இரட்சிக்க வாரும்.!
@ *நான் நினைப்பது எதுவும் நடப்பதில்லை. நான் நல்லவனாக இருக்க நினைத்தாலும் இருக்க முடிவதில்லை.!* என்று புலம்பிய *சிம்சோன்* போல் புலம்புகிறோமே.? எங்களை மீட்க வாரும் மாரநாதா..!
@ *நான் விழுந்த துன்பத்திலேயே மீண்டும் விழுகிறேன்.!*
என்று நினைத்து தன் பாவத்தை அறிக்கையிட்டு விடுதலைப் பெற்ற
அன்பு சகோதரர் *சகேயுவை* மீட்டது போல் எங்களை மீட்க வாரும் இயேசுவே.!
@ *சவுல்* போல எத்தனை முறை எட்டி எட்டி உதைத்தாலும் இருளில் இருக்கும் எங்களுக்கு நம்பிக்கையின் ஒளியை படர செய்ய
வாரும் இயேசுவே.!
@ புத்திப் பேதலித்து போய், செய்வதறியாது நிலை தடுமாறும் *பேதுரு* போல் வாழ்ந்து கொண்டு இருக்கும் எமக்கு விடுதலை வாழ்வு தர வாரும் மாரநாதா..!
@ *ஆண்டவராகிய இயேசுவே வாரும்.!* குழம்பிய எங்கள் இதயங்களை விழிப்புடன் இருக்கச்செய்யும்.!
@ ஆண்டவரே வாரும்.!
பயந்துக் கொண்டு இருக்கிற எங்களுக்கு மன தைரியத்தை தாரும்.!
@ ஆண்டவரே.!
இன்னும் *ஐந்து அப்பம் இரண்டு மீன்கள்* வாசனை அறியாது,சாப்பிடாத ஏழை மக்களுக்கு உணவளிக்க வாரும் மாரநாதா.!
@ ஆண்டவரே.!
விளிம்பு நிலை மக்களை மையத்திற்கு அழைத்து வர வாரும் இயேசுவே.!
@ ஆண்டவரே வாரும்.!
*எங்கள் வாழ் நாளைக் கணிக்க எங்களுக்குக் கற்பியும்; அப்பொழுது ஞானமிகு உள்ளத்தைப் பெற்றிடுவோம்.!*
-- *சங்கீதம்.90:12*.
1) *மாரநாதா:எங்கள் நம்பிக்கை:*
(Maranatha: Our Faith).
@ இயேசு,
*என்னைப் போல ஒரு தீர்க்கதரிசியாக இருப்பார்.!*
என்று மோசே கூறினார்.
*உண்மை நிகழ்வு:*
@ பிரான்ஸ் நாட்டில் *ஜரீன் கான்-Jerin Khan* என்றொரு இஸ்லாமியப் பெண்மணி இருந்தார். அவர் ஒரு துப்புரவுப் பணியாளர். கிறிஸ்துவின் போதனையால் ஈர்க்கப்பட்டு, கிறிஸ்தவ மதத்திற்கு மாறியவர். அதன் பொருட்டு ஜரீன் கான் என்ற தன்னுடைய பெயரை *சோபியா* என்று மாற்றிக்கொண்டார்.
கிறஸ்தவ மதத்திக்கு மாறிய பிறகு அவர், தான் துப்புரவுப் பணி செய்யும் இடங்களிலெல்லாம் கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை அறிவித்து வந்தார். மேலும் தன்னாலான உதவிகளையும் ஏழை, எளிய மக்களுக்குச் செய்துவந்தார்.
சோபியாவுக்கு சற்று கண் பார்வை தெரியாது.அதனால் சோபியா தன் முன் யாரோ மனிதர் நிற்கிறாரென்று நினைத்து நற்செய்தி அறிவித்தார்.!
ஒருநாள் சோபியா செய்து வந்த நற்செய்தி பணிகளைப் பிடிக்காத ஒருவர் அவரிடம், *இயேசு விரைவில் வருகிறார்.! என்று அறிவிக்கிறீர்கள்.! என்பதற்காக போயும், போயும் ஒரு மரச் சிலைக்கு முன்பாகவா நற்செய்தி அறிவிக்கவேண்டும்.?* என்று ஏளனமாகப் பேசினார்.
அந்த மனிதரின் பேச்சுக்கு சோபியா இவ்வாறு பதிலளித்தார். *கிறிஸ்துவின் போதனையைக் கேட்டுவிட்டு, மரம்போல் யாருக்குமே நற்செய்தி அறிவிக்காமல் இருக்கின்ற உங்களைக் காட்டிலும், மரசிலைக்கு நற்செய்தி அறிவிக்கின்ற நான் எவ்வளவோ மேல்.!* என்று ஒரு போடு போட்டார் சோபியா.
@ கேள்வி கேட்டவர் வெட்கித் தலைகுனிந்து நின்றார்.நாம் எந்த நிலையில் இருந்தாலும் கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை அறிவிக்க வேண்டும்.
--உபாகமம் 18:15.
@ இது மேசியாவின் தீர்க்கதரிசனம் ஆகும்.
@ *மோசே* அநீதிக்கு எதிராக போர் செய்தார், *இயேசுவும்* போர் செய்தார்.
@ மோசே சாதாரண பிறப்பு; இயேசு கன்னி பிறப்பு.
@ மோசஸ் மற்றொரு குடும்பத்தால் வளர்க்கப்பட்டார், இயேசு அவரது தாய் தந்தையால் வளர்க்கப்பட்டார்.
@ மோசஸ் *தோரா* கொண்டு வந்தார், இயேசுவுக்குப் பிறகு
புதிய ஏற்பாடு மக்களால் ஈர்க்கப்பட்டது.
@ மோசஸ் திருமணம் செய்து குழந்தைகளைப் பெற்றார்,இயேசு திருமணம் செய்து கொள்ளவில்லை.
@ மோசே மேய்ப்பனாக வேலை செய்தார், இயேசுவும் மேய்ப்பராக வேலை செய்தார்.
@ மோசே 12 தலைவர்களைத் தேர்ந்தெடுத்தார். இயேசு 12 சீடர்களைத் தேர்ந்தெடுத்தார்.
@ மோசே தனது எதிரிகளை வென்றார்,இயேசு அவரது எதிரிகளால் *கொல்லப்பட்டார்.!*.
@ மோசே ஒரு கட்டத்தில் தனது மக்களுடன் துன்புறுத்தலுக்குத் தப்பி ஓடினார், ஆனால் இயேசு அவ்வாறு செய்யவில்லை.
@ மோசே செங்கடலைப் பிளந்தார், இயேசுவின் அற்புதங்கள் எதையும் பிளவு
படுத்தவில்லை.
@ *கர்த்தர் நேருக்கு நேர் அறிந்த மோசேயைப் போல ஒரு தீர்க்கதரிசி இஸ்ரவேலில் தோன்றவில்லை!* --உபாகமம் 34:10.
@ அந்த வகையில், மோசேயைப் பின்பற்றி, அவருடைய திறமையுள்ள வேறு எந்தத் தீர்க்கதரிசியும் கடவுளால் குறிப்பாக யூத குடும்பங்களில் இருந்து அனுப்பப்படவில்லை.
--உபாகமம் 18:18.
@ தீர்க்கதரிசிகளின் வரிசையில் இயேசு ஒரு கெளரவமான இடத்தைப் பெற்றிருந்தாலும், அவருடைய பணி, சூழ்நிலைகள் மற்றும் பங்கு ஆகியவை மோசேயிடமிருந்து வேறுபட்டவை.
@ கிறிஸ்துவின் வெளிப்பாடு யாருடனும் ஒப்பிடாத வகையில் புதுமையானது.
--யோவான் 8:26.
@ எனவே, மோசேயின் வரையறுத்த குணங்கள் அவரை இஸ்ரவேல் புத்திரரிடையே தீர்க்கதரிசன பாரம்பரியத்தில் தனித்துவமாக்கியது.
--மத்தேயு 21:11.
@ இயேசு,
*உங்கள் சொந்த சகோதரர்களிடமிருந்து*
ஒரு தீர்க்கதரிசியாக இருப்பார்.
--யாத்திராகமம் 20:1-3.
@ கடவுளின் குமாரனாக, கிறிஸ்து உலகத்தின் பாவங்களுக்காக சிலுவையில் தன்னைத் தியாகம் செய்ய வருகிறார்.
@ *உலகிற்கு வரவிருக்கும் தீர்க்கதரிசி இவரே!* என்றார்கள்.
--யோவான் 6:14
@ அப்போது மோசே, *அந்தத் தீர்க்கதரிசியின் பேச்சைக் கேட்காத எவரும் கடவுளுடைய மக்களிடமிருந்து முற்றிலும் துண்டிக்கப்படுவர்'.!* என்றார். --அப்போஸ்தலர் 3:22-23.
@ இங்கே இயேசுவின் வருகை பற்றி பேசப்படுகிறது.
-- *யோவான் 16:12-14*.
2) *மாரநாதா:வாழ்க்கையின் வழி:*
(Maranatha: Way of Life)
--1 கொரிந்தியர் 16:13.
@ இது தூய பவுலின் அறிவு சார்ந்த மற்றும் இறை சார்ந்த அறிவுரை ஆகும்.
விழித்திருந்து கடவுளைக் காண ஆயத்தமாக இருங்கள் என்று தூய பவுல் நம்மை அழைக்கிறார்.
--கொலோசெயர் 4:2.
@ நாம் அனைவரும்
குழந்தை இயேசுவை வரவேற்க கடவுளின் அன்பில்
பலப்பட வேண்டும்.
--எபேசியர் 6:10.
*உண்மை நிகழ்வு:*
@ இருபதாம் நூற்றாண்டில் மிகப்பெரிய கிறிஸ்தவ எழுத்தாளராக அறியப்பட்டவர் *ஹென்றி நூவன்-Henry Noven* ஆவார்.
சிலர் அவருடைய எழுத்தாற்றலையும், திறமையையும் பார்த்துவிட்டு அவரை ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்திலே பணியாற்றக் கேட்டுக்கொண்டனர். ஆனால் அவரோ எனக்கு எந்தப் பொறுப்பும் தேவையில்லை என்று சொல்லி கனடாவில் உள்ள டொராண்டோ என்ற இடத்தில் இருக்கும் ஒரு *மனவளர்ச்சி குன்றிய-Mentally Retarder* குழந்தைகளுக்கு இறைப்பணியாளராக பணியாற்றினார்.
*தனக்கு பேரும், புகழும் வந்தாலும் ஆண்டவருக்காக, அவருடைய மக்களுக்காக மட்டுமே பணிசெய்வேன்; கடவுளின் வருகையில் கடவுளை சந்திபபேன்.!* என்று சொன்ன ஹென்றி நூவனின் செயல் உண்மையிலே பாராட்டுக்குரியது.
@ ஆம்.!
கடவுள் நம் அருகில்
மிகவும் நலிவுற்றவராக வருகிறார்,
கடவுளை வரவேற்க தயாராக இருப்போம்.!
*வாரும் இயேசுவே.! எங்களை புதுப்பியும்.!*
@ *மாரநாதா!*
என்பது ஒரு அரமேய வார்த்தை.இதன் அர்த்தம்
*வா, ஆண்டவரே.!*
என்பதாகும்.
@ முதலில் அப்போஸ்தலர் ஆகிய *தூய பவுலால்* பயன்படுத்தப்பட்டது.
--1 கொரிந்தியர் 16:22.
@ பிறகு இந்த வார்த்தை விரைவில் கொரிந்து பேரரசு முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களின் உதடுகளில்
உச்சரிக்கப்பட்டது.
@ *மாரநாதா.!*
என்ற சொல்
பவுலின் ஆசையை விட
இன்பமானது.!
@ *மாரநாதா.!* தப்பியோடிய சவுலைலை இழுத்துப் பிடித்து, *தூய பவுலாக* மாற்றியது.
@ *மாரநாதா.!*
ஒரு பிரார்த்தனையை விட வலிமையானது.
@ *மாரநாதா.!* அது ஒரு வாழ்க்கை முறையாக இருந்தது. மேலும் தேவாலயம் அதன் நம்பிக்கையை வாழும் கட்டமைப்பாக
மாற்றி இருந்தது.
*வரலாற்று பின்னணி:*
@ ஆதி திருச்சபை நிறைய துன்புறுத்தலை எதிர்கொண்டது, ரோமானிய ஆட்சியின் கீழ் ஒரு கிறிஸ்தவரின் வாழ்க்கை வாழ்வது எளிதானது அல்ல.
@ *ஜூலியஸ் சீஸர்* மற்றும்
*அகஸ்டஸ் சீஸர்* காலத்தில் சீஸர் தான் கடவுள் என்று அனைவருக்கும் அறிவிக்க வேண்டும் என்று ரோமானியர்கள் கோரினர்.
@ *ஒரே கடவுள்-One Lord* மற்றும்
*ஒரே இறைவன்-One God*
அதாவது *(ஒரே நாடு ;ஒரே தேர்தல்)* போல அவர்கள் எதிர்பார்த்தனர்.
@ ஆனால் ஆதிகால மக்கள்
*இயேசு கிறிஸ்து தான் ஒரே கடவுள்-Jesus is the only God* என்று அறிந்திருந்தனர், மேலும் அவர்களின் நல்ல மனசாட்சியால் சீஸரை
*ஆண்டவர்* என்று அழைக்க முடியாது என்று எதிர்த்தனர்.
@ எனவே ரோமானியர்கள் அவர்களை துரோகிகளாக பார்த்து, துன்புறுத்தி, கிறிஸ்தவர்களைக் கொன்றனர்.
@ இறுதியில் இந்த கிறிஸ்தவர்கள் அழிக்கப்படுவார்கள், விசுவாசத்தை கைவிடுவார்கள், அல்லது அவர்கள் சமரசம் செய்து கொண்டு சீசரோடு ஒருங்கிணைவார்கள் என்பது எதிர்பார்ப்பு.
@ ஆனால் அந்த பாதகமான சூழ்நிலைகளின் கீழ் வாழ்ந்தாலும், உண்மையில் அவர்களின் விசுவாசம் அவர்களின் தேவாலயத்தை மேலும் பலப்படுத்தியது.
@ அவர்கள் கடவுள் மீது கொண்டிருந்த நம்பிக்கையின் சாட்சியை உற்சாகப்படுத்தியது, மேலும் அவர்களின் மன உறுதியை வளப்படுத்தியது.
@ இந்த நேரத்தில் அவர்களுக்கு உதவிய முக்கிய கூறுகளில் ஒன்று தான் *மாரநாதா.!(கர்த்தர் வருகிறார்)* .
@ இயேசு மீண்டும் வருகிறார் என்ற உறுதியான நம்பிக்கை அவர்களுக்கு மேலும் நம்பிக்கை தந்தது.
@ யூதர்களின் வாழ்த்து சொல்லான *ஷாலோம்-Shalom* அதாவது *அமைதி-Peace* என்று பொருள்படும்
வார்த்தைக்குப் பதிலாக, சபையின் விசுவாசிகள் கூடும்போதோ அல்லது பிரிந்தபோதோ அவர்கள்
*வணக்கம்-Good Morning* அல்லது *குட் பை-Good Bye* என்று சொல்வதற்கு ப், பதிலாக *மாரநாதா.!*
என்றே சொன்னார்கள்.
@ அந்த மேல் நோக்கிய பார்வை தேவாலயத்தில் புரட்சியை ஏற்படுத்தியது.
@ *இயேசு எப்படியும் திரும்பி வருகிறார்!* என்ற அந்த அசைக்க முடியாத நம்பிக்கை தான் கிறிஸ்தவர்களின் ஆணிவேர்.
@ *உம்முடைய ராஜ்யம் வருக, உமது சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவதுபோல் பூமியிலும் செய்யப்படுவதாக.!* என்று நாம் ஜெபிக்கும்போது கூட, *மாரநாதா.!* என்று தானே சொல்கிறோம்.
--மத்தேயு 6:10.
@ கிரேக்க மொழி பேசும் கிறிஸ்தவர்களுக்கு கிரேக்க மொழியில் எழுதப்பட்ட கடிதத்தில் ஒரு அரமேய வார்த்தையை தூய பவுல் ஏன் சொருக வேண்டும்.?
@ தன் கடிதத்தைப் படிப்பவர்களுக்கு மாரநாதா என்றால் என்ன என்று தெரியும் என்று பவுல் கருதியிருக்க வேண்டும்.
@ ஆனால், தான் சொல்ல நினைத்ததை ஏன் கிரேக்க மொழியில் சொல்லவில்லை.?
@ அரமேய மொழியில் *மாரநாதாவை* ஏன் பயன்படுத்த வேண்டும்..?
@ ஏனென்றால், முதல் நூற்றாண்டில் ஆரம்பகால கிறிஸ்தவர்களில் பெரும்பாலானோர் கிரேக்க மொழி பேசினாலும் கூட, மாரநாதா ஒரு
*இரகசிய கடவுச் சொல்லாக-Secret Password* அவர்களிடையே மாறிவிட்டது.
@ கிறிஸ்தவர்களை யூதர்கள் மற்றும் ரோமானியர்கள் அடிக்கடி துன்புறுத்தப்பட்ட நேரத்தில், இந்த அரமேய கடவுச்சொல் என்பது மற்ற கிறிஸ்தவர்களை அடையாளம் காண அவர்கள் பயன்படுத்தக்கூடிய ஒரு வகையான குறியீடாக இருந்தது.
@ கிரேக்கர்களும் ரோமானியர்களும் அதன் பொருளைப் புரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லாமல் இருந்தது.
@ *மாரநா-தா-Marana-tha - (Our Lord, come.!)* என்று பிரிக்கின்றனர்.
இதன் பொருள்
*எங்கள் ஆண்டவரே, வாருங்கள்.!*
@ இது , ஒரு பிரார்த்தனை வார்த்தை,
இயேசு மீண்டும் வருவார் என்றும், தம்முடைய உண்மையுள்ள மக்களை பரலோகத்தில் உள்ள அவர்களது வீட்டிற்கு அழைத்துச் செல்வார் என்றும் நம்பினார்கள்.
--யோவான் 14:1-3.
@ ஒரு சில ஆங்கில மொழிபெயர்ப்புகள்
இவ்வாறு கூறுகின்றன:
*மாறன்-அத்தா-(Maran-atha - Our Lord has come.!)*
அதாவது
*எங்கள் ஆண்டவர் வந்துவிட்டார்.!*
என்றும் விளக்கம் தருகின்றன.
--பிலிப்பியர் 2:6-8.
@ தூய பவுல் இங்கே கடவுளை
நேசிக்காதவர்களை
*சபிக்கப்பட்டவர்கள்* என்று அழைக்கிறார்.
அதற்கு கிரேக்க வார்த்தையான *அனாதிமா* அதாவது
*கண்டனம் அல்லது அடக்கப்பட்டது- Anathema* means *condemned-damned*.
என்று கூறினார்.
--1 கொரிந்தியர் 16:22.
@ இங்கே,
கர்த்தராகிய இயேசுவை நேசிக்காதவர்கள் மீது பவுல் ஒரு குறிப்பிட்ட சாபத்தை உச்சரிப்பது போல் தெரிகிறது.!
@ ஒருவன், *கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நேசிக்காவிட்டால், அவன் அனாதிமாவாக (சபிக்கப்பட்டவனாக) இருக்கட்டும். மாரநாதா..!*
என்பதே இந்த வசனத்தின் சரியான பொருள்.
@ இன்று.! ஊக்கமிழந்தவர்களுக்கு,
மாரநாதா!
@ இன்றைய கவலையில் இருப்பவர்களுக்கு மாரநாதா!
@ நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளால் கவலையில் மூழ்கும் போது சொல்லுங்கள், மாரநாதா!.
@ *மாரநாதா..!-நம் ஆண்டவர் வருகிறார்.!*
-- *தீத்து 2:13*.
3) *மாரநாதா.!: வார்த்தையின் சக்தி:*
(MARANATHA:The Power of His Word).
--யோவான் 1:1.
@ *அந்த வார்த்தை மாம்சமாகவும் இரத்தமாகவும் மாறியது, மேலும் அக்கம் பக்கத்திற்கு ஆறாக ஓடிச் சென்றது.!*.
*உண்மை நிகழ்வு:*
@ இரண்டாம் உலகப் போரின் போது சிப்பாய் ஒருவர் தனது மனைவியையும், அவர்களின் குழந்தை மகனையும் விட்டுச் செல்வதற்கு முன்
*நான் விரைவில் திரும்பி வருவேன்-I'll be back soon* என்று
கூறினார்.
@ நான்கு ஆண்டுகள் போரும், பயங்கர சண்டையும் நடைபெற்றன.அந்த தாய் தன் பையனிடம் தன் கணவரான சிப்பாயின் உருவப்படத்தைக் காட்டி, *பார், அது தானே உன் அப்பா.! ஒரு நாள் அவர் வீட்டிற்கு வரப் போகிறார்-See, that's your Daddy.One day He's going to come Home.* என்று கூறினார்.
ஒரு நாள் காலையில் அந்த சிறுவன் தன் அம்மாவைப் பார்த்து, *அம்மா..!அப்பா இந்த புகைப் படச் சட்டத்தை (Frame) விட்டு வெளியே வந்தால் நன்றாக இருக்கும் அல்லவா.?* என்று கேட்டான்.
@ 2,000 ஆண்டுகளுக்கு முன்பு கடவுள் அப்படித்தான் சட்டத்தை உடைத்து கொண்டு வந்தார் நம்மை சந்திக்க.!
@ இயேசு கலிலேயாவிலுள்ள கானா ஊரில் தண்ணீரை திராட்சரசமாக மாற்றிய போது,
*இவ்வாறு அவர் தம்முடைய மகிமையை வெளிப்படுத்தினார், அவருடைய சீஷர்கள் அவர் மீது விசுவாசம் வைத்தார்கள்.!*
இது தான் மாரநாதாவின் மகிமை.
--யோவான் 2:11.
--யோவான் 1:6-7.
@ *யோவான் ஸ்நானகன்* யாரென்று.?
அறிமுகம் செய்து வைக்கின்றார்
செபதேயுவின் மகன், இயேசுவின் சீடரான *நற்செய்தியாளர் யோவான்*.
@ அவர் தன்னைப் பற்றியும், தனக்குப் பின் வரும் *மேசியா* பற்றியும் ஒரு நிகழ்ச்சி வழியாக விளக்குகின்றார்.
@ *நீர் யார்..?*
என்று மக்கள் கேட்ட போது,
*நான் மேசியா அல்ல.!* என்று
என்று வெளிப்படையாகச் சொல்லி விடுகிறார் யோவான் ஸ்நானகன்.
@ மேலும்,
*நான் ஒரு குரல்.!*
என்று தன்னை அடையாளப்படுத்துகிறார் யோவான் ஸ்நானகன்.
--யோவான் 1:4.
@ ஒளியான அவர் உலகில் இருந்தார். உலகு அவரால் உண்டானது. ஆனால் உலகு அவரை அறிந்து கொள்ளவில்லை.
@ இன்று,
*ஒளியான இறைவன் உலகில் வாழும்போது ஏன் நானும் நீங்களும் இன்று இருளில் நடமாட வேண்டும்..?*
--யோவான் 1:9-10.
@ நானே உலகின் ஒளி,என்னைப் பின் தொடர்பவர் இருளில் நடக்கமாட்டார், வாழ்வுக்கு வழிகாட்டும் ஒளியைக் கொண்டிருப்பார்.
-- யோவான்: 8:12.
@ *நம்மிடம் வாழ்வுக்கு வழிகாட்டும் ஒளி உண்டு என்று நம்பும் நானும் நீங்களும் ஏன் வாழ்வுக்கு வழிகாட்டும் ஒளியை ஏற்றுக் கொள்ள மறுக்கின்றோம்..?*
@ காலம் நெருங்கி வந்துவிட்டது. விழிப்போடு முன்னறிவோடு வாழ்வுக்கு வழிகாட்டும் இறைமகன் இயேசுவை பின் செல்வோம்.
@ கடவுள் ஒளியாய் இருக்கிறார், அவரிடம் இருள் என்பதே இல்லை. நாம் இருளில் நடந்து கொண்டு அவருடன் நமக்கு நட்புறவு உண்டு என்போமென்றால் நாம் பொய்யராவோம். உண்மைக்கேற்ப
வாழாதவராக இருப்போம்.
--1யோவான் 1:5-6.
@ இறைவனிடம் இருளில்லை.! ஆனால் அவரை அன்பு செய்யும் நானும் நீங்களும் ஏன் இருளான பாதையில் நடக்க வேண்டும்..?
--யோவான் 1:14.
@ *வார்த்தை மாம்சமாகி நம்மிடையே குடியிருந்தது* என்று வசனம் கூறுகிறது.
@ ஆதியில் கடவுளோடு இருந்தவர் மனிதனாக மாறி மற்ற மனிதர்களுடன் வாழ்ந்தார் என்பதே இதன் பொருள்.
@ இப்போது நாம் அந்த வார்த்தை இயேசு கிறிஸ்துவாக
இருப்பதை அறிவோம்.
இதனையே *அவதாரம்-Incarnation*
என்று அழைக்கப்படும்.
@ *நற்செய்தியாளர் யோவான்* கடவுளுடைய குமாரனை *வார்த்தை* என்று அழைப்பது நமக்கு அசாதாரணமாகத் தோன்றலாம்.
@ பண்டைய எபிரேயர்கள் வார்த்தைகளுக்கு சக்தி இருப்பதாக நம்பினர்.!
@ வெறும் ஒலிகளை விட-வார்த்தைகள் உண்மையில் பெரிய காரியங்களைச் செய்தன.
@ *வார்த்தை* என்பது மக்களுக்கும் கடவுளுக்கும் இடையே இருந்த ஐஸ்கிரீம் அல்ல;
அது உணர்வுகள் மற்றும் எண்ணங்களின் நெருக்கமான பரிமாற்றம்.!
@ வார்த்தைகளால் பேசுகிறோம். வார்த்தைகளால் சிந்திக்கிறோம். வார்த்தைகளை வாக்குறுதிகளாகக் கொடுக்கிறோம்.
@ கடவுளைப் பொருத்தவரையில் வார்த்தையும் செயலும் ஒன்றாகவே இருக்கிறது. எபிரேயத்தில்
*தவார்-Tawar*
என்னும் சொல்
*ஒரே நேரத்தில் வார்த்தையையும் செயலையும் குறிக்கிறது.!*
-- *ஏசாயா 2:3*.
*நிறைவாக:*
@ *முதல் வருகை* கிறிஸ்துவின் முதல் வருகையை திரும்பிப் பார்க்க வைக்கிறது. *இரண்டாம் வருகை* கிறிஸ்துவின் இரண்டாம் வருகையை எதிர்நோக்குகிறது. இந்த இரண்டு வருகைகளுக்கு இடையில் நாம் வாழ்கிறோம்.
@ இப்போது நாம் ஒவ்வொருவரும் இயேசுவை இரட்சகராகவோ அல்லது நீதிபதியாகவோ
ஏற்றுக் கொள்ள தயாராக இருக்க வேண்டும்.
*யதார்த்தமான உண்மை:*
@ துறைமுகத்தில் இருக்கும் கப்பல் எவ்வித ஆபத்துமின்றி பாதுகாப்பாக இருக்கும். ஆனால் துறைமுகத்தில் இருப்பதற்காக எந்தக் கப்பலும் செய்யப்படுவதில்லை.
@ கப்பல் கடலில் பயணம் செய்யவேண்டும்:
*கடல் கொந்தளிப்பு, புயல், பனிப்பாறை முதலிய பல்வேறு தடைகளையும் மேற்கொள்ள வேண்டும், தனது இலக்கை அடைந்து சாதனை படைக்க வேண்டும், அவ்வாறே மனிதர்களும் தங்கள் வாழ்வில் எழும் பல்வேறு சவால்களைச் சமாளித்து சாதனை புரிய வேண்டும்!*
அதற்காகவே கடவுள் நம்மை தேடி வருகிறார்.!
@ இயேசுவின் பிறப்பு முதல் நித்தியம் முழுவதும்
*நம்முடைய மேய்ப்பராகத் தொடர்ந்து நம்மோடு இருப்பார்!*.
@ மேலும் பிரதான மேய்ப்பன் தோன்றும்போது, மகிமையின் மங்காத கிரீடத்தைப் பெறுவீர்கள்.
--1 பேதுரு 5:4.
@ துன்பப்பட்டவர்களுக்கு நற்செய்தியைக் கொண்டு வர கர்த்தர்
வருகிறார் .!
--சங்கீதம் 40:7.
@ மனம் மாறாத மைந்தர்களுக்காக
இயேசு குழந்தையாக பிறந்து வருகிறார்.!
வாரும் மாரநாதா.!
@ மாரநாதா.!
எங்களுக்கு மகிழ்ச்சியை தர வாரும்.!
@ மாரநாதா.!
எங்கள் கண்ணீரைத் துடைக்க வாரும்.!
@ மாரநாதா.!
எங்களை ஆசீர்வதியும்.!
@ மாரநாதா.!
எங்களைக் காப்பாற்ற வாரும்.!
@ *கர்த்தராகிய இயேசுவே வாரும்.!*
என்று சொல்வோம்.
-- *வெளிப்படுத்துதல் 22:20*.
--இறைச் செய்தி,
*ப.ஜார்ஜ்*,
@ 8056720930,
*சபை ஊழியர்,
தூய மத்தேயு ஆலயம், மேட்டுக்காலனி,
CSI, மங்கலம் குருசேகரம்,
ஆந்திரப் பிரதேசம்.
Comments
Post a Comment